தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை ரணில் அவர்களுக்கே - பிரசன்ன ரணதுங்க

08 Sep, 2024 | 07:15 PM
image

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மதகுருமார், மருத்துவர், ஆசிரியர், விவசாயி மற்றும் தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாம் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

“இயலும் ஸ்ரீலங்கா” பியகம தொகுதியின் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தெல்கொட டெமரிண்ட் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு நாட்டில் தற்போது 07 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி - உங்கள் தேர்தல் வெற்றி எப்படி இருக்கிறது? 

பதில் - முழு நாடும் ரணிலுக்கு எப்படித் திரும்பியது என்பதை உங்களால் பார்க்க முடியும். இந்த நாடு இருந்த நிலையில் இருந்து எப்படி மீண்டது என்பது இந்த நாட்டின் அறிவார்ந்த மக்களுக்கு தெரியும். பொய் சொல்பவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

கேள்வி -  அண்மையில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. அதன் வெற்றியைப் பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்? 

 பதில் - ரணில் விக்கிரமசிங்கவுக்கு தபால் மூல  வாக்குகளில் அனுகூலம் உண்டு. கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் இருந்தது, பொருளாதார நெருக்கடி இருந்தது. ஆனால் நாங்கள் எந்த ஒரு அரச  ஊழியரையும் நீக்கவில்லை.மேலும் அரச ஊழியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், எரிபொருள்மற்றும் எரிவாயு வாங்க 20 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று 07 பில்லியன் டொலர்களை கையிருப்பாக உருவாக்க முடிந்ததால், அரச ஊழியர்களின் உதவித்தொகையை அதிகரிக்கவும், சம்பளத்தின் மீதான வரிகளை குறைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்தார்.

 கேள்வி - உங்களில் பிரபலமானவர்களில் ஒருவர் நேற்று சுயாதீனத்திற்கு சென்றுவிட்டார். சஜித் பிரேமதாசாவுடன் இணைய வேண்டும் என்றும் நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்களா? என்ன ஒரு புதிய கருத்து .

 பதில் - அவர் சுயாதீனத்துக்கு சென்றது  என்பது வேறு விஷயம். ஆனாலும் அவர் அரசியல் பணிகளுக்கு வருகிறார். அப்படி ஏதாவது நடக்குமா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் அவரது  அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்து மொட்டிலிருந்து வந்து விட்டார்.ஆனால் அவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவும் நிலையில்தான் இருக்கிறார்.

கேள்வி - ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுரகுமாரவுக்கும் இடையில் டீல் இருப்பதாக  ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் கூறுகிறார்களே?

 பதில் - நாம் இன்று இந்த நாட்டு மக்களுடன் டீல் செய்கின்றோம். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை  அழிக்க சில குழுக்கள் முன்வந்துள்ளன. இப்போது அது தோற்கடிக்கடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்களது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற கட்சிகள் தங்கள் விவகாரங்களை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

 கேள்வி - நாமல் ராஜபக்ஷ சலூன் கதவை மூடியதால் புதிய கட்சியை உருவாக்கினாரா? 

 பதில் - சலூன் கதவை மூடிவிட்டார்களா என்று தெரியவில்லை. நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு செல்ல வேண்டும்.இன்று நாட்டு மக்கள் மொட்டின் மீது சோர்வடைந்து விட்டார்கள். தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.  மதகுருமார், வைத்தியர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாமைச் சுற்றி நாங்கள் ஒன்றுகூடுகிறோம்.

 கேள்வி - வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் ஊடகங்கள் ஊடாக சில குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா?

 பதில் - 88/89 காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி செய்த அதே அழிவை 2022 இலும் செய்திருக்கிறது. இவ்வளவு செலவு செய்ய அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது? உள்ளாடை ஓட்டை என்றால்  அதை வாங்க வசதியற்றவர்கள்  இதற்கு எப்படி  செலவு செய்வார்கள்? இன்று பெரிய அளவில் கட்அவுட்களை உருவாக்கி வருகின்றனர். புத்திசாலிகள் அதைப் பற்றி சிந்திக்கிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. 

 கேள்வி - மற்ற வேட்பாளர்கள் அதிகம் தருவதாக கூறுகிறார்களே?

பதில் - அநுரகுமார திஸாநாயக்க அரசியலில் வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்துள்ளார். மற்றவர்கள் வாக்குறுதிகளை வழங்கும் போது, ரணில் விக்கிரமசிங்க அந்த விடயங்களை ஏற்கனவே செய்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார இருவரும் இன்று மக்களை கேலியாக்கி உள்ளனர்.

கேள்வி - உங்களால் வாக்குறுதி அரசியல் செய்ய முடியுமா?

 பதில் - அனுரகுமார திஸாநாயக்க  பொய்  கூறி மக்களை தவறாக வழிநடத்தினார். அவர்கள் தான் இந்த நாட்டில் பொறாமையையும் வெறுப்பையும் உருவாக்கினார்கள். பிரசன்ன ரணதுங்கவின் மருமகன் வோட்டர்ஸ் ஏஜில் இருப்பதாக நேற்று முன்தினம் அனுரகுமார தெரிவித்திருந்தார். அவை மிகவும் முட்டாள்தனமான கதைகள். என் மருமகன்  வோட்டர்ஸ் ஏஜில் இல்லை. முடியாமற் போனாலும் அரசாங்கம் இரண்டு பெண்களை  போட்டிருந்தால், அங்கே இரண்டு சித்திமார்கள் இருந்ததாகச் சொல்வார். எங்கள் குடும்பத்தில் ஆறு பேரைப் பற்றி பேசுகிறோம். ஆறு குழந்தைகளை வளர்க்காத தாய், தந்தையைக் குற்றம் சொல்ல வேண்டும். ஆறு குழந்தைகளை வளர்க்காத தாய், தந்தையைக் குறை சொல்ல வேண்டும்.   முட்டாள்தனமான கதைகளைச் சொல்கிறார். இப்படிப்பட்ட முட்டாள்களை இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04