ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு புதிய மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image result for ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி  முன்னணிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு பிரதிநிதிகள் இவ்வாறு மாவட்ட அமைப்பாளர்களாக கடந்த 21ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சுமுது விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக கே.பீ.பிரியந்த பிரேமகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக எஸ்.கஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எம். எஸ். சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்திற்காக ரசிக தேசப்பிரிய ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் புதிய அமைப்பாளர்களாக ஆர் எம் சனத் பத்மசிறி மற்றும் ஏ ஏ ஏ லதீவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.