பொலிஸாரின் சீருடையில் நிறமாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 478 ஆவது பொலிஸ் நிலையமாக அமைக்கப்பட்டுள்ள பண்டாரவளை ஹல்துமுல்லை பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு பற்றிய போது இலங்கை பொலிஸாரின் சீருடை நிறத்தை நீல நிறமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிகழ்வின் போது பதுளை எல்ல பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பமொன்றிற்கு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பதுளை மாவட்டத்தின் அம்பகஸ்தோவ, போகஹகும்புர ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையங்களும் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிரி, மாகாணசபை உறுப்பினர்கள் மாற்று மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பங்குபற்றயுள்ளமை குறிப்பிடத்தக்கது.