காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி

08 Sep, 2024 | 04:01 PM
image

'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்தான்குடி - 05இல் அமைந்துள்ள பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இன்று (08) முற்பகல் விஜயம் செய்தார்.

அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப் மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். 

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.ஜசீம் ஆகியோர் இதன்போது இணைந்திருந்தனர்.

பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலின் கீழ் 02 ஜும்மா பள்ளிவாசல்கள் உட்பட 04 பள்ளிவாசல்கள் 07 குர்ஆன் பாடசாலைகள், 02 அரபிக் கல்லூரிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காத்தான்குடி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தனகலு ஓயா உட்பட சில இடங்களில்...

2024-10-13 13:48:06
news-image

உடல்நல பாதிப்பினால் தேர்தலில் போட்டியிடவில்லை என...

2024-10-13 13:06:03
news-image

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம்...

2024-10-13 13:03:09
news-image

சீரற்ற காலநிலையால் இருவர் பலி; 76,218...

2024-10-13 12:46:23
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-10-13 12:54:10
news-image

தேசிய கட்சிகளின் தேசியப் பட்டியல் வெளியீடு!

2024-10-13 13:12:23
news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29