ஒருமித்த நாடு அரசியலமைப்பு உருவாக்கம்; அனுரவின் முயற்சியின் பின்னணியில் ரணில் - விமல் வீரவன்ச

08 Sep, 2024 | 05:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரணில் - அனுர டீல் அரசியல் இன்று வலுவானதாக காணப்படுகிறது. ஒருமித்த நாடு என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

சிலாபம் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தேசியத்தை பாதுகாப்பதற்காகவே குறுகிய காலத்தில் சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க , அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோரின் கொள்கை பிரகடனத்தின் உள்ளடக்கம் ஒருமித்ததாக காணப்படுகிறது. 

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார். ரணில் - அனுர டீல் அரசியல் இன்று வலுவானதாக காணப்படுகிறது. பகிரங்க விவாதம் ஒன்றில் ஈடுபடுவதற்கு ரணில், சஜித், அனுர, நாமல் ஆகியோருக்கு தற்றுணிவு கிடையாது. இவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும். 

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒருமித்த நாடு என்பதை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அனுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அனுரகுமார திஸாநாயக்க முன்னின்று செயற்பட்டார். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் செயற்படமாட்டார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மை காலமாக அனுரகுமார திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்தி பேசுவதை அவதானிக்க முடிகிறது. அனுரகுமார தலைமையில் அரசாங்கத்தை உருவாக்கி, பங்களாதேஸ் நாட்டின் தற்போதைய நிலைமையை தோற்றுவித்து அரசியலமைப்புக்கு முரணாக மீண்டும் அதிகாரத்துக்கு வரவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06