ஜனாதிபதி வேட்பாளர்கள் பகிரங்க விவாதம் - சஜித், நாமல், அரியநேத்திரன் பங்குபற்றவில்லை; பங்குபற்றலை உறுதிப்படுத்திய வேட்பாளர்கள் பங்குபற்ற வேண்டும் - மார்ச் 12 அமைப்பு வலியுறுத்தல்!

08 Sep, 2024 | 11:54 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி வேட்பாளர்களுடனான பகிரங்க விவாதத்தில் பங்குப்பற்றுவதாக குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை. சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மாத்திரம் விவாதத்தில் கலந்துகொண்டார். 

ஜனாதிபதி வேட்பாளர்களான விஜயதாச ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓசல ஹேரத், பிரியந்த விக்கிரமசிங்க ஆகியோர் இன்றைய  விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்களுடனான விவாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) மாலை 3 மணிக்கு விவாதம் ஆரம்பமானது. 

இதன்போது உரையாற்றிய பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளருக்கும் இந்த விவாதத்தில் பங்குபற்ற அழைப்பு விடுத்திருந்தோம். 

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவாதத்தில் பங்குபற்ற முடியாது என்று எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விவாதத்தில் கலந்துகொள்வது கடினமானது. இருப்பினும் முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய 38 வேட்பாளர்களில் 16 வேட்பாளர்கள் தமது பங்குப்பற்றலை உறுதிப்படுத்தியிருந்தனர். 

முதலாவது விவாதத்தில் கலந்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் நேரம் சிக்கலால் தன்னால் பங்குப்பற்ற முடியாது என்பதை இறுதி தருணத்தில் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் இன்றைய விவாதத்தில் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்றார். 

மாலை 3 மணிக்கு விவாதம் ஆரம்பமாவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மாத்திரம் மண்டபத்துக்கு வருகைத் தந்திருந்தார். ஏனைய வேட்பாளர்கள் வருகைத் தரும் வரை காத்திருந்த நிலையில் விவாதம் ஆரம்பமானது. ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விவாதத்தை தொகுத்து வழங்கினார். 

இந்த பகிரங்க விவாதத்தில் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கேள்விகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்கப்பட்டது.இதற்கமைய விவாதத்தில் கலந்துக் கொண்ட சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தமது தேசிய மூலோபாய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பதிலளித்தார். 

பகிரங்க விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரம் நிறைவடையும் வரை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச , நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை. 

இதனை தொடர்ந்து உரையாற்றிய பெப்ரல் அமைப்பில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி 'சிறந்த அரசியல் கலாச்சாரத்iதை உருவாக்கவே அனைத்து வேட்பாளர்களையும் ஒரு மேடையில் ஒன்றிணைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைகளை மக்களுக்கு உறுதியாக எடுத்துரைக்க வேண்டும். ஆகவே பங்குப்பற்றலை உறுதிப்படுத்திய வேட்பாளர்கள் பகிரங்க விவாதத்தில் கலந்துக கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்'என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39