அதிகாரப்பகிர்வை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது; சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லத் தயார் - திலித் ஜயவீர

08 Sep, 2024 | 01:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிகார பகிர்வு மற்றும் அதிகார பகிர்வின் கட்டமைப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்துக்கணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.அரசியல்வாதிகள் ஒருசிலர் ஒன்றிணைந்து அதிகார பகிர்வு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நியாயமற்றது.  யாருக்கு அதிகார பகிர்வு அவசியம் என்பதை மக்களிடம் கேட்க வேண்டும். அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.அதிகார பகிர்வு பற்றி பேசும் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு ஏதும் கிடையாது.ஜனநாயக ஆட்சி முறைமை என்றால் மக்களிடம் கேட்க வேண்டும். 

மக்களின் தீர்மானத்துக்கு அமையவே செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் குறுகிய நோக்கங்களுக்காக அதிகார பகிர்வை பயன்படுத்துவார்களாயின் தேசியத்துக்காக அதனை தோற்கடிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். 

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற 'ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கலந்துகொண்டார். ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கருத்தாடலை தொகுத்து வழங்கினார். 

கேள்வி மற்றும் அதற்கான பதில் வருமாறு,

கேள்வி சுகாதாரம், நலன்புரி, கல்வி, பொது போக்குவரத்து, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, ஆகிய அடிப்படை தேவைகளை சகல பிரஜைகளும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு  காணப்பட வேண்டும். நீங்கள்  ஆட்சிக்கு வந்தால் இந்த அடிப்படைத் தேவைகளை அனைவரும் நியாயமான வகையில் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கும் யதார்த்தமான  நடவடிக்கைகள் மூன்றை குறிப்பிட முடியுமா ? 

பதில் - அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதனையும் வேறுப்படுத்த முடியாது. தேசிய மூலோபாய செயற்திட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.  அனைத்து துறைகள் மற்றும் தேவைகளையும் ஒன்றிணைக்கும் திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஏதும் தேசிய மூலோபாயத் திட்டங்களை முன்வைக்கவில்லை. சகல பிரஜைகளையும் கருத்திற் கொண்டு தேசிய மூலோபாய செயற்திட்ட அதிகார சபையை ஸ்தாபிக்கும் யோசனையை எமது திட்டத்தில் முன்வைத்துள்ளோம்.

கேள்விபொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு பல திட்டங்களை முன்வைத்துள்ளீர்கள். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்சிக்காக நடைமுறைக்கு சாத்தியமானவற்றை குறிப்பிட முடியுமா ?

பதில்சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் குறித்து விசேடமாக கலந்துரையாட வேண்டும். முதலீடுகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதற்கு சட்ட  ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.  சகல தொழிற்றுறைகளிலும் இலங்கையின் உற்பத்தி சின்னத்தை மேம்படுத்த விசேட திட்டங்களை தயாரித்துள்ளோம்.

முதலீட்டாளர்கள் இலகுவான முறையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.மனித வளத்தை மேம்படுத்தி அதனூடாகவே பொருளாதாரத்தை  விருத்தி செய்ய முடியும்.

கேள்விசர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் சுயாதீனமான இராச்சியமாக பிறிதொரு வெளியக தரப்புடன் நிதி விவகாரங்களில் தொடர்பினை பேணும் போது அவற்றை தொடர வேண்டும். சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிய வேண்டிய தேவை கிடையாது.

நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடபட வேண்டும். தேசிய மட்டத்தில் நிதி பாய்ச்சலை அதிகரித்துக் கொள்ளாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. கடன் முகாமைத்துவத்தை கணக்காளருக்கு வழங்கி விட்டு நிதி திரட்டல் குறித்து நடைமுறைக்கு சாத்திமயமான  திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

கடன் செலுத்தலுக்கு தற்காலிக இடைவேளை கிடைத்துள்ளது. நிர்வாகத்துக்கு தேவையான நிதியை திரட்டிக் கொண்டு உரிய காலத்தில் கடனை செலுத்தாவிடின் பொருளாதார நெருக்கடி மென்மேலும் தீவிரமடையும்.

கேள்வி யுத்தம் முடிவடைந்து இன நல்லிணக்கம் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க உங்களிடமுள்ள  திட்டங்கள் என்ன ?

பதில் - யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தேசிய மூலோபாய திட்டத்தில் ' ஒன்றிணைந்த தேசியம்' என்ற கருத்திட்டத்தின் கீழ் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இனம்,மதம், மற்றும் குலத்தை முன்னிலைப்படுத்தி எவரும் வேறுப்படுத்தப்படலாகாது என்பதில் உறுதியாக உள்ளேன்.

தேசியத்தை பற்றி பேசும் போது அது அரசியல் மேடைகளில் இனவாதமாக பார்க்கப்படுகிறது. மக்களை பிளவுப்படுத்தும் சட்டங்களுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிகக்கமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

கேள்வி - அதிகார பகிர்வு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் -அதிகார பகிர்வு மற்றும் அதிகார பகிர்வின் கட்டமைப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்துக்கணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.அரசியல்வாதிகள் ஒருசிலர் ஒன்றிணைந்து அதிகார பகிர்வு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நியாயமற்றது.  யாருக்கு அதிகார பகிர்வு அவசியம் என்பதை மக்களிடம் கேட்க வேண்டும். அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.அதிகார பகிர்வு பற்றி பேசும் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு ஏதும் கிடையாது.

கேள்விஅதிகார பகிர்வுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பில்லை. மக்களிடம் கோர வேண்டும் என்று கேட்கின்றீர்களா ?

பதில் - எமக்கு தெரியாது. ஜனநாயக ஆட்சி முறைமை என்றால் மக்களிடம் கேட்க வேண்டும். மக்களின் தீர்மானத்துக்கு அமையவே செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் குறுகிய நோக்கங்களுக்காக அதிகார பகிர்வை பயன்படுத்துவார்களாயின் தேசியத்துக்காக அதனை தோற்கடிக்க வேண்டும்.

கேள்விஊழல் ஒழிப்பு வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் ஊடாகவே நல்லாட்சியை ஸ்தாபிக்க முடியும்.இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் - தேர்தல் காலத்தில் மாத்திரமே ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி பேசப்படும். அரச மற்றும் தனியார் நிதி கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் முறைமைப்படுத்தினால் ஊழலை ஒழிக்க முடியும்.சட்டத்தை இயற்றி விட்டால்  மாத்திரம் ஊழல் ஒழியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06