ஆர்.ராம்
சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணையவழியில் நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் சீனப் பிரஜைகளாக உள்ளனர். குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசியில் உள்ள தரவுகள் சீன மொழியில் இருப்பதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்புடன் பொலிஸார் சீனாவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியை நாடியிருந்தன.
இதனையடுத்து குறித்த விசாரணைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சீன விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் வருகை தந்துள்ளதோடு இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜூன் வரையிலான காலப்பகுதி வரையில் இலங்கையில் இணையவழித் தளங்கள் மூலம் நிதி மோசடி செய்தமை குறித்து சீன மற்றும் இந்திய பிரஜைகள் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
அக்குழுவில் 31 சீன பிரஜைகள் உட்பட மொத்தம் 137 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்கள் சிலரிடமிருந்து 158 கையடக்கத் தொலைபேசிகள் 16 மடிக்கணினிகள் மற்றும் 60 சாதாரண கணினிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM