கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட வேண்டும் - திலித் ஜயவீர

Published By: Digital Desk 7

08 Sep, 2024 | 09:24 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக இருத்தல் கூடாது. தற்போதைய கருத்துச் சுதந்திரம் முகப்பு புத்தகத்தில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற 'ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கலந்துக் கொண்டார். ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கருத்தாடலை தொகுத்து வழங்கினார்.

கேள்வி மற்றும் அதற்கான பதில் வருமாறு,

கேள்வி – கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

பதில் - ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக இருத்தல் கூடாது. தற்போதைய கருத்துச் சுதந்திரம் முகப்பு புத்தகத்தில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட வேண்டும்.

கேள்வி – திலித் ஜயவீரவுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் ?

பதில் - இந்த விவாதத்துக்கு என்னை தவிர ஏனைய வேட்பாளர்கள் எவரும் வரவில்லை. கருத்தாடல் இல்லாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. சவால்களை எதிர்க்கொள்ளும் தற்றுணிபு எனக்கு உண்டு.ஆகவே மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

முறைமை மாற்றத்தை கோரியே 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியை மக்கள் விரட்டியடித்தார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிடின் அது மக்கள் போராட்டத்தை அவமதிப்பதாகும்.

பிரதான வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து நிலையான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

இவர்களின் கொள்கைத் திட்டத்தை பார்த்தால் கவலை மாத்திரமே மிகுதியாகும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை என்னால் ஏற்படுத்த வேண்டும்.எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்குச்சாவடிக்குச் சென்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34