(நெவில் அன்தனி)
பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் பங்குற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி பாலித்த பண்டார 5ஆம் இடத்தைப் பெற்றார்.
இலங்கை சார்பாக பாரிஸ் பராலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய எட்டாவதும் கடைசியுமான மாற்றுத்திறனாளி பாலித்த பணடார ஆவார்.
இப் போட்டி இலங்கை நேரப்படி சனிக்கிழமை (07) இரவு 11.50 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவுக்குப் பினனர் 12.45 மணியவவில் நிறைவடைந்தது.
ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதலில் பங்குபற்றிய பாலித்த பண்டார (F42) தனது இரண்டாவது முயற்சியில் 14.51 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து ஐந்தாம் இடத்தைப் பெற்றார். இது அவரால் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.
எட்டு மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றிய இப் போட்டியின் முதல் முயற்சி முடிவில் 14.46 மீற்றர் தூரப் பெறுதியுடன் இரண்டாம் இடத்திலிருந்த பாலித்த பண்டார, 2ஆவது முயற்சி முடிவில் 14.51 மீற்றர் தூரப் பெறுதியுடன் 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
மூன்றாவது முயற்சியில் குண்டை 14.31 மீற்றர் தூரத்திற்கு எறிந்த பாலித்த பண்டார 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
நான்காவது முயற்சி முடிவில் பாலித்த பண்டார (14.50 மீ.) நான்காம் இடத்திலும் ஐந்தாவது முயற்சி (13.91 மீ.) மற்றும் கடைசி முயற்சி (14.14 மீ.) ஆகியன முடிவில் ஐந்தாம் இடத்திலும் இருந்தார்.
டோக்கியோ 2020 பராலிம்பிக்விளையாட்டு விழாவிலும் இதே பிரிவுக்கான குண்டு எறிதலில் பாலித்த பண்டார 5ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.
பாரிஸ் பராலிம்பிக் குண்டு எறிதில் போட்டியில் குவைத் மாற்றுத்திறனாளி பைசால் சொரூர் (F42) 15.31 மீற்றர் தூரப் பெறுதியுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பிர்தானிய மாற்றத்திறனாளி அலெட் டேவிஸ் (15.10 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் லக்சம்பேர்க் மாற்றுத்திறனாளி டொம் ஹெப்ஷீல்ட் (F63 வகப்படுத்தல் பிரிவுக்கான பராலிம்பிக் சாதனையுடன் 14.97 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இப் போட்டி முடிவுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமித்த துலான் கொடிதுவக்கு வென்ற ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் இலங்கை திருப்தி அடைந்தது.
பாரிஸ் ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு (F44) 67.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தனது பிரிவுக்கான உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM