(இராஜதுரை ஹஷான்)
ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக இருத்தல் கூடாது. தற்போதைய கருத்துச் சுதந்திரம் முகப்புத்தகத்தில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற 'ஜனாதிபதித் தேர்தல் விவாத'த்தில் சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கலந்துகொண்டார். ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கருத்தாடலை தொகுத்து வழங்கினார்.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான பதில் வருமாறு,
கேள்வி – கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில் - ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக இருத்தல் கூடாது. தற்போதைய கருத்துச் சுதந்திரம் முகப் புத்தகத்தில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட வேண்டும்.
கேள்வி – திலித் ஜயவீரவுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
பதில் - இந்த விவாதத்துக்கு என்னை தவிர ஏனைய வேட்பாளர்கள் எவரும் வரவில்லை. கருத்தாடல் இல்லாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. சவால்களை எதிர்கொள்ளும் தற்றுணிபு எனக்கு உண்டு. ஆகவே மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்.
முறைமை மாற்றத்தை கோரியே 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியை மக்கள் விரட்டியடித்தார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிடின் அது மக்கள் போராட்டத்தை அவமதிப்பதாகும்.
பிரதான வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து நிலையான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
இவர்களின் கொள்கைத் திட்டத்தை பார்த்தால் கவலை மாத்திரமே மிகுதியாகும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியும். எதிர்வரும் 21ஆம் திகதி வாக்குச்சாவடிக்குச் சென்று அறிவுபூர்வமாக சிந்தித்து நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM