கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

07 Sep, 2024 | 05:57 PM
image

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,  

வழமையாக பேருந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்து யாசகம் பெறும் இவர் காலைக்கடனை கழிப்பதற்கு குளக்கட்டினை நோக்கி சென்றிருந்தவேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.  

இதேவேளை கல்முனை பொலிஸார் மற்றும்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

யானைத் தாக்குதலுக்குள்ளானவர் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை  வசிப்பிடமாக கொண்ட 68 வயதுடையவர் என்றும் 03 பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன் இந்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன. 

உயிரிழந்தவரின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூரண விசாரணையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54