தமிழ் திரையுலகின் 'ஜெனிபர் லோபஸ்' என கொண்டாடப்படும் நடிகை சிம்ரன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தி லாஸ்ட் ஒன்' என பெயரிடப்பட்டு, அதன் பிரத்யேக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் 'தி லாஸ்ட் ஒன்' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக சிம்ரன் தோன்றுகிறார். இந்த திரைப்படத்தை எ போர் ரி மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தீபக் பஹா தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகையாக அறிமுகமாகி 28 வது ஆண்டில் பயணிக்கும் நடிகை சிம்ரனின் 'தி லாஸ்ட் ஒன்' எனும் திரைப்படம்- திகில் மற்றும் ஃபேண்டஸி ஜேனரில் தயாராகிறது. இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் உருவாகிறது.
சிம்ரன் கதையின் நாயகியாக நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருப்பதால்... இந்த பான் இந்திய படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM