தளபதி விஜய் மற்றும் இளைய தளபதி விஜய் என திரையில் இரட்டை வேடத்தில் தோன்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தளபதி விஜயின் 'கோட்' திரைப்படம் கடந்த ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் ஆறாயிரம் திரைகளில் திரையிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை சந்தித்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 126 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே விஜயின் 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்பதும், தயாரிப்பு நிறுவனத்தின் கெடுபிடிகளால் வசூல் குறைந்தது என திரையுலக வணிகர்கள் விவரித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமையன்று ‘கோட்’ படத்தின் வசூல் நானூறு கோடியை தொடும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM