சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'ஜெய் பீம்' பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தின் உருவாகி வரும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மனசிலாயோ..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று வெளியிடப்படும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். 'வேட்டையன்' பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM