பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித உரிமைகள் அமைச்சர் பதவி நீக்கம்

Published By: Digital Desk 3

07 Sep, 2024 | 01:44 PM
image

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மனித உரிமைகள் அமைச்சர் சில்வியோ அல்மெய்டா மற்றும் மற்றுமொரு அமைச்சரை பாலியல் குற்றச்சாட்டினால் வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்துள்ளார்.

“பாலியல் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திக் கொண்டு அமைச்சரை பதவியில் வைத்திருப்பது நிலையானது அல்ல என ஜனாதிபதி கருதுகிறார்" என்று லூலாவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியை இழந்த  சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரான அல்மெய்டா தெரிவித்துள்ளதாவது, 

விசாரணைக்கு சுதந்திரம் வழங்குவதற்காக தன்னை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி லூலாவிடம் கேட்டுக் கொண்டேன்.

"நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கும், என்னை நிலைநிறுத்துவதாகும் இது எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்... சட்டச் செயல்பாட்டிற்குள் நான் என்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய உண்மைகள் வெளிவரட்டும்," என தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்களில் ஒருவர் இன சமத்துவ அமைச்சர் அனியேல் பிராங்கோ என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50