பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக வசந்த சமரசிங்கவிடம் மனுஷ நாணயக்கார இழப்பீடு கோரல்

Published By: Digital Desk 2

07 Sep, 2024 | 02:21 PM
image

வெளிநாட்டு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக கூறி பணம் பெற்றதாக ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இஸ்ரயேல் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக கையொப்பமிடுவதற்கு மனுஷ நாணயக்கார பணம் பெற்றுக்கொள்வதாக வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்துக்கள், முற்றிலும் பொய்யானது என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்கார பொறுப்பில் இருந்த போது அதிகளவானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களுக்குள் நட்டஈடு தொகையை வழங்காவிடின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்தவை படுகொலை செய்யவா அவரது பாதுகாப்பு...

2024-12-13 21:52:27
news-image

இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை...

2024-12-13 21:54:16
news-image

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து...

2024-12-13 17:12:22
news-image

பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர்...

2024-12-13 17:34:04
news-image

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம்...

2024-12-13 21:11:23
news-image

கங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில்...

2024-12-13 20:49:02
news-image

பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம்...

2024-12-13 17:10:04
news-image

எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர்...

2024-12-13 20:27:04
news-image

எல்ல-வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது - அனர்த்த...

2024-12-13 20:16:31
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

2024-12-13 19:50:29
news-image

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால்...

2024-12-13 19:08:44
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 300,162 இலங்கையர்கள்...

2024-12-13 18:44:18