ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது ; ஐ,தே.க. உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம்!

07 Sep, 2024 | 11:32 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. அதனால் அவரை வெற்றிபெறச்செய்ய ஐக்கிய தேசிய கட்சி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற  ஐக்கிய தேசிய கட்சியின் 78ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் கலந்துக்கெபண்டு உரையாற்றும் போதே   அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

1946ல் பாம்கோட் மாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி, மிகவும் பலம்மிக்க பல வேலைத்திட்டங்களை இந்த நாட்டுக்கு செய்திருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்தால் நாடும் வீழ்ச்சியடைகிறது.  

ஐக்கிய தேசிய கட்சி எழுந்து நின்றால் நாடும் அபிவிருத்தியடைகிறது. 1970ல் ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்தது. நாடு வீழ்ச்சியடைந்தது. 1977ல் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்துக்கு வந்தபோது நாடு முன்னேற்றமடைந்தது. 

அதேபோன்று 1994ல் ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைந்தபோது, 2001ல் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து மரை பொருளாதாரமே இருந்தது. 

2001ல் அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு நேர் பொருளாதாரமாக மாற்றி நாட்டை பலப்படுத்தியது. வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை 2015ல் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி பலப்படுத்தியது.  

2022ல் நாடு வீழ்ச்சியடைந்தது. ஐக்கிய தேசிய கட்சியும் வீழ்ச்சியடைந்தது. மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை பொறுப்பேற்றபோது நாடு மீண்டும் அபிவிருத்தியடைய தொடங்கியது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு செய்ய சேவைகள் அளப்பரியதாகும். 

ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஒரு கொள்கையுடன் செயற்பட்டுவரும் கட்சியாகும். அதனாலே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்துடன் இருந்து நாட்டின் ஜனாதிபதியாகி, அவரின் வேலைத்திட்டத்தின் மூலம் நாடு ஸ்திர நிலைக்கு வந்திருக்கிறது. 

அதனால் ஐக்கிய தேசிய கட்சி புது வடிவம் பெற்று, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி முன்னுக்கு வந்த கட்சியாகும்.  

இன்று ரணில் விக்ரமசிங்க வீழ்ச்சியடைந்த நாட்டின் பொறுப்பை சுமந்து, ஓரளவு முன்னுக்கு கொண்டுவந்துள்ளார். தேர்தலில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியி்டுகிறார்.  

அதனால் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச்செய்வதற்கு தேவையான சக்தியையும் தைரியத்தையும் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது எமது அனைவரதும் பொறுப்பாகும்.  

ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் மாத்திரமே இந்த நாட்டுக்கு எதிர்காலம் இருக்கிறது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் அவரிடம் மாத்திரமே இருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாரிகம கடலில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப்...

2025-01-16 11:58:05
news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

காத்தான்குடியில் பூட்டப்பட்ட வீட்டில் பொது சுகாதார...

2025-01-16 11:55:50
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56