(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில அணித் தலைவர் ஒல்லி போப், பென் டக்கட் ஆகிய இருவரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இங்கிலாந்து பலமான நிலையில் இருக்கிறது.
மேலும் ஏற்கனவே இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ள இங்கிலாந்து தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் முன்னேற முயற்சிக்கவுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக மாலை 5.45 மணியளில் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர்முடிவுக்கு வந்தபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் ஒல்லி போப் 103 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 103 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
தனது 49ஆவது டெஸட் போட்டியில் விளையாடும் ஒல்லி போப் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
முன்னதாக ஆரம்ப வீரர் டான் லோரன்ஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இங்கிலாந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (45 - 1 விக்.)
ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் பென் டக்கட்டும் ஒல்லி போப்பும் 2ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
பென் டக்கெட் 79 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டபோது ஒல்லி போப்புடன் ஹெரி புறூக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM