சோவுல், தென் கொரியா - செப்டம்பர் 18,2024 அன்று, HWPL உலக சமாதான உச்சிமாநாட்டின் 10 வது ஆண்டு விழா தென் கொரியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் 122 நாடுகளை எட்டும் வகையில் கொண்டாடப்படவுள்ளது.
'பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் உலக சமாதான சமூகத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளின் கீழ், உலகளாவிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால உத்திகளை நோக்கிய கண்ணோட்டத்துடன், ஒரு தசாப்த காலமாக நீடித்த சமாதானத்திற்கான உலகத் தலைவர்கள் மற்றும் குடிமக்களின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு நினைவுகூருகிறது.
2014 ஆம் ஆண்டில்,பரலோக கலாச்சாரம், உலக சமாதான, ஒளியின் மறுசீரமைப்பு (HWPL)-ஒரு சர்வதேச சமாதான அமைப்பு, அரசியல் மற்றும் மதத் துறைகளைச் சேர்ந்த ஆயிரம் உலகளாவிய தலைவர்களையும், சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குழுக்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் ஊடகங்களையும் சோவுலில் நடந்த தொடக்க HWPL உலக சமாதான உச்சிமாநாட்டிற்கு கூட்டியது.
மோதல் தீர்வு, மத நல்லிணக்கம் மற்றும் நீடித்த சமாதானத்தை உறுதி செய்வதற்கான சட்ட கருவிகளை செயல்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் குறித்து உச்சி மாநாடு எடுத்துரைத்தது.
ஆண்டுவிழாவின் நோக்கம் 2014 முதல் சாதனைகளை மறுஆய்வு செய்வதும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதும் ஆகும் என்று HWPL கூறுகிறது.
இந்த நிகழ்வு பிராந்திய திறமைகளை சேகரித்து, சமாதானமான உத்திகளுக்குத் தேவையான தொடர்புகளை நிறுவுதல், உள்ளூர் சமாதான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க பிராந்திய தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டு திறன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைய, ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நிலைகளில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்படும்.
"அனைவரும் சமாதானத்தின் தூதர்களாக மாறுவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ், HWPL அனைத்து மட்டங்களிலும் சமாதானத்தை மேம்படுத்துவதில் தனிப்பட்ட பொறுப்பை ஆதரிக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து சமாதானச் செய்திகளைச் சேகரித்து, சமாதான என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் சமாதான மற்றும் ஒற்றுமைக்கான விருப்பத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவற்றை வெளிப்படுத்த HWPL திட்டமிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 2014 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களால் ஊக்குவிக்கப்பட்ட HWPL, அதன் உலகளாவிய பங்காளிகளுடன் சேர்ந்து, இராணுவ பதற்றங்கள், பொருளாதார மோதல்கள், பருவநிலை மாற்றம் மற்றும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சவால்களை மேம்படுத்தப்பட்ட பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை மூலம் எதிர்கொள்ள உறுதிபூண்டுள்ளது.
HWPL ஒரு வலுவான சமாதான நிர்வாக கட்டமைப்பை நிறுவுவதற்கும், சர்வதேச அமைப்புகள், அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகத்தை இணைப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 9 வது ஆண்டு விழாவில், HWPL தலைவர் லீ மான்-ஹீ, "இளைஞர்களின் உயிர்களை ஏன் யுத்தத்தில் தியாகம் செய்ய வேண்டும்? அரசியல் என்றால் என்ன, அது யாருக்காக? யுத்தம் வெடிக்கும்போது, இளைஞர்கள் தான் தியாகம் செய்யப்படுகிறார்கள். வார்த்தைகளால் மட்டுமே சமாதானத்தை அடைய முடியாது. இந்த உலகில் சமாதான வென்றிருந்தால், வருந்தத்தக்க மரணங்கள் இருந்திருக்காது. நமது சந்ததியினர் வாழும் உலகளாவிய சமூகத்திற்கு சமாதானத்தை ஒரு பாரம்பரியமாக நாம் விட்டுச் செல்ல வேண்டும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM