ரொய்ட்டர்
இலங்கையின் அழகான காலிக்கோட்டையில் உள்ள தாரிக் நசீமின் வீட்டின் தாழ்வாரத்தில் ஐஸ்கீறீம் உண்பதில் சுற்றுலாப்பயணிகள் மும்முரமாக காணப்பட்டனர்.
இலங்கை தனது வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இஅதிலிருந்து புதிதாக மீண்டுகொண்டிருக்கி;ன்ற சூழ்நிலையில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியின் மையமாக காலியும் அதன் கோட்டையும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அந்நிய செலாவாணி முற்றாக அற்றுப்போனதை தொடர்ந்து உருவான நெருக்கடியால் முற்றாhக பாதிக்கப்பட்டவர்த்தகங்களில்இ வீட்டில் தயாரிக்கப்பட்ட 22 வகை ஐஸ்கிறீம்களை விற்பனைசெய்யும் டாரிக் நசிமின் டெய்ரி கிங்கும் ஒன்று.
அந்த நெருக்கடி அத்தியாவசியப்பொருட்கள் எரிபொருட்கள் உரங்கள் என அனைத்து இறக்குமதிகளையும் சாத்தியமற்றதாக்கியது.
நாங்கள் எதிர்கொண்ட பெரும் அடி அது என தெரிவித்தார் 62 வயது நசீம்.
அவரது 13 வருட வர்த்தகம் 2022ம் ஆண்டின் நிதி நெருக்கடி இ அதற்கு முந்தைய கொவிட் என்ற இரட்டை நெருக்கடிகளால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
எங்களால் கொவிட்டிற்கு முந்தைய நிலைமைக்கு திரும்பமுடியவில்லைஇஎன தெரிவி;த்த அவர் அந்த நிலைமை எப்போதும்மீண்டும் திரும்பும்என்பது தெரியவில்லை என குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவர் பின்பற்றப்போகும் சீர்திருத்தங்கள் கொள்கைகளிலேயே இலங்கையின் உறுதியான மீள் எழுச்சிக்கான பாதை தங்கியுள்ளது.
புதிய ஜனாதிபதி சரியான நபர்களை நியமிக்ககூடியவராகவும்நாட்டை திறம்படநிர்வகிக்ககூடியவராகவுமிருக்கவேண்டும் ஏனென்றால் மேலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை என தெரிவித்தார் இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம் சாந்திகுமார்.
22 மில்லியன் மக்களை கொண்ட நாடு அதன் பழமையான அழகான கடற்கரைகள்பண்டைய கோயில்கள்நறுமண தேயிலை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற நாடு நெருக்கடிகள் காரணமாக பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்ததால்மின்கட்டணம் 65 வீதம் அதிகரித்ததால்இநெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
பலமணிநேர மின்துண்டிப்புஇஎரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள்இமருந்துகள் அற்ற மருத்துவமனைகள் போன்றவற்றால்; சீற்றமடைந்த ஆயிரக்கணக்கான கொழும்பு ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடவே;ணடிய நிலையை ஏற்படுத்தின.
எனினும் பின்னர் அவர் நாடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஐந்தாண்டு பதவி;க்காலத்தை பூர்த்தி செய்வதற்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.அவர் சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவி மற்றும் 25 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்றவற்றின் மூலம் தற்கால மீட்பி;றகு தலைமைதாங்கியுள்ளார்.
தற்போது பணவீக்கமும்வட்டிவீதங்களும் ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளனஇ2024 இல் வளர்ச்சி வீதம் 3 ஆக காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
205000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்இஅந்நிய செலாவணியை உழைப்பதற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கும்சுற்றுலாத்துறை2023 ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதமாக காணப்பட்டது.
இந்த வருடம் 2 பில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருவதை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை 3 பில்லியன் டொலர்களை உழைப்பதற்கு திட்டமிட்டு;ள்ளது.2019 இல் இதே நிலைமை காணப்பட்டது.
காலிகோட்டையின் வீதிகளில் சுற்றுலாப்பயணிகள் வெள்ளிநகைகளிற்காக விற்பனையாளர்களுடன் பேரம் பேசுகின்றனர்இகாலனித்துவ கட்டிடங்களில் இருந்து படங்களிற்கு போஸ் கொடுக்கின்றனர்.
மீள்எழுச்சி குறித்து திருப்தியடைந்திருந்தாலும்இதனது வருமானம் இன்னமும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் காணப்பட்டதை விட குறைவானதாகவே காணப்படுவதாக தெரிவிக்கின்றார்நசீம்.
அவரது ஐஸ்கிறீமைருசிபார்ப்பதற்கு சில உள்ளுர் மக்கள் வந்துள்ளனர்.
புதிய ஜனாதிபதி விதிமுறைகளை வலுப்படுத்தவேண்டும்இஎன தெரிவிக்கும் அவர் அதிகளவு பணத்தை செலவிடும் சுற்றுலாப்பயணிகள் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு விரும்பும் நாடாக இலங்கையை மாற்றவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
சிறந்த வசதிகள் சிறந்த சந்தைப்படுத்தல் விசா பிரச்சினைகளிற்கு தீர்வை காணுதல் ஆகியன சுற்றுலாத்தொழில்துறையினரின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றன.
இலங்கைக்கு அந்நிய செலாவணி தேவைஇ என்கின்றார் 35 ஹோட்டல்களை கொண்டுள்ள ஜெட்விங் சி;ம்பொனியின் தலைவர் ஹிரான் குரே.
பாதுகாப்பும் ஸ்திரதன்மையுமே மிக முக்கியமானவை அவற்றை இழந்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்கின்றார் அவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM