தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ராமம் ராகவம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' கொலசாமி போல..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராமம் ராகவம்' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ், ஹரிஷ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்வி ராஜ், மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிருத்வி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'கொல சாமி போல தெரிந்தாயே நீயே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பின்னணி பாடகர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியிருக்கிறார். தந்தையின் அருமையை போற்றும் இந்த பாடலில் நாயகன் தன் தந்தையை, 'மீசை வைத்த வேதமே..' என்று குறிப்பிடுவது இந்த பாடலுக்கு பெருமை சேர்க்கிறது. இந்தப் பாடலும் பாடலின் வரிகளும் பாடலின் மெட்டும் பாடகரின் சோகம் ததும்பும் குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM