எம்மில் சிலருக்கு திடீரென்று உடலில் வலது பாகமோ அல்லது இடது பாகமோ முழுமையாக செயலிழந்துவிடும். இதனை மருத்துவ மொழியில் ஹெமிபிலீஜியா என குறிப்பிடுவர். இதற்கு நிவாரணம் அளிப்பதற்கு தற்போது நவீன பாணியிலான இயன்முறை சிகிச்சை பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூளையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவோ அல்லது முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் காயம் காரணமாகவோ சிலருக்கு அவர்களின் உடலில் ஒரு பகுதி பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகி விடும். அதாவது செயல் இழந்துவிடும். மேலும் இத்தகைய பாதிப்பு தசை பலவீனம் மற்றும் தசைகளின் ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல்கள், தசையின் விறைப்புத்தன்மை ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்பு குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த உடனும், பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அது போன்றவர்களுக்கு இத்தகைய பாதிப்பு பிறவி ஹெமிபிலீஜியா என குறிப்பிடப்படுகிறது.
தசை பலவீனம், தசைகளின் விறைப்புத்தன்மை, தசை பிடிப்பு, தசை சுருக்கம், மோட்டார் திறனில் இடையூறு, நடப்பதில் அசௌகரியம், சமநிலையை பராமரிப்பதில் தடுமாற்றம், பொருட்களை உறுதியாக பிடித்துக் கொள்வதில் சம சீரற்ற தன்மை, நினைவக பிரச்சனை, கவனம் செலுத்துவதில் சிக்கல், பேச்சில் தடுமாற்றம், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு ஹெமிபிலீஜியா எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.
இதனை ஃபேசியல் ஹெமிபிலீஜியா, ஸ்பைனல் ஹெமிபிலீஜியா, காண்ட்ராலேட்ரல் ஹெமிபிலீஜியா, ஸ்பாஸ்டிக் ஹெமிபிலீஜியா என பல வகைகளாக மருத்துவர்கள் வகைப்படுத்தி, அதற்குரிய சிகிச்சையை வழங்குகிறார்கள். இதற்கு பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சை தான் முதன்மையான நிவாரண சிகிச்சையாக வழங்கப்படுகிறது. மேலும் மாடிஃபை கான்ஸ்டிரைட் -இன்ட்யூஸ்ட் மூவ்மென்ட் தெரபி எனும் நவீன இயன்முறை சிகிச்சை இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது. மேலும் சிலருக்கு இயன்முறை சிகிச்சையை வழங்கும் போது நவீனமான முறையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கருவிகளைக் கொண்டும் நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது.
- வைத்தியர் வீணா
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM