நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கம் - அனுரகுமார

Published By: Rajeeban

06 Sep, 2024 | 12:51 PM
image

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜாஎல தேர்தல் பிரச்சார கூட்டத்தில்இதனை தெரிவித்துள்ள அவர் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை நாட்டை  எவ்வாறு ஆட்சி செய்ய முடியும் என்பது தொடர்பில் மூன்று தெரிவுகள் உள்ளன  எனஅவர் தெரிவித்துள்ளார்.'

எந்த வழிமுறையை நடைமுறைப்படுத்தினாலும் தேசிய மக்கள் சக்தி  அரசியலமைப்பின்படி இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும்  என அவர் தெரிவித்துள்ளார்.

2020 இல் மக்கள் வழங்கிய ஆணைதற்போது வெற்றிடமாகவுள்ளது என தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர்  புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும்வரை அமைச்சரவை குறித்த கேள்வி எழும் என தெரிவித்துள்ளார்.

இடைக்காலத்தில நாங்கள் அரசமைப்பின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வோம் என தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க நான் ஜனாதிபதியானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் மற்றுமொருவருக்கு வழங்குவேன்,அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நானும் எங்கள் கட்சியின் மூவரும் சேர்ந்து நான்குபேர் கொண்ட அமைச்சரவையை அமைப்போம் எனவும் அவர் தெரிவி;துள்ளார்.

இந்த ஏற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றால் அரசமைப்பு அனைத்து அமைச்சுபொறுப்புகளையும் தன்கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதிவழங்குகின்றது,அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றால் நாங்கள் காபந்து அரசாங்கத்தை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16