நுவரெலியா - நோர்வூட் பகுதியில் காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

06 Sep, 2024 | 11:57 AM
image

நுவரெலியா, நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 04 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

இந்த மாணவர்கள் நால்வரும் கடந்த 04 ஆம் திகதி புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர்.

பின்னர், காணாமல் போன மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன மாணவர்கள் நால்வரும் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் நால்வரும் வேலை வாய்ப்பு தேடி ராகம பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மாணவர்கள் நால்வரும் ராகம பொலிஸாரின் தலைமையில் அவர்களது பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31