(லியோ நிரோஷ தர்ஷன்)

Image result for சீன  அம்பாந்தோட்டை துறைமுக virakesari

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னர் சீனாவின் மூன்றாம் நிலை தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றார். அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை சீர்ப்படுத்துவது சீன தலைவரின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் சீனா திருப்திகரமான நிலையில் இல்லை.

இந்நிலையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைபினை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில்,  அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் குத்தகை காலம்  99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக்கம் 60 வரையான ஆண்டு காலத்துக்கு குறைத்தல் , குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளித்தல், குத்தகை உரிமையை 80 : 20 என்ற விகிதத்தில் இருந்து 60 : 40 வீதம் அல்லது 51 : 49 வீதம் எனக் குறைத்தல் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு இலங்கை பொறுப்புக் கூறும் என்ற வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றை சாதகமான முறையில் கையாள்வதற்காக சீன அரசாங்கத்தின் மூன்றாம் நிலை தலைமையிலான குழு அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளது. இவர்கள் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்தித்து  அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்க உள்ளனர். 

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.