ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட் 1 ' படத்தின் புதிய பாடல் வெளியீடு

05 Sep, 2024 | 07:09 PM
image

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜூனியர் என்டிஆர் எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ' தேவரா - பார்ட் 1 ' படத்தில் இடம்பெற்ற 'தாவூதி' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தேவரா பார்ட் 1' எனும் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜானவி கபூர், சயீப் அலிகான், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், லைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யுவ சுதா ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நந்தமூரி தாரக ராமராவ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் வழங்குகிறார்.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'கொள மீனா.. உன்ன கொழம்பு வைக்க போறேனா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் எழுத, பின்னணி பாடகர் நகாஷ் ஆசிஷ் மற்றும் ரம்யா பெஹரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜானவி கபூரின் இளமை ததும்பும் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதனால் இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சரத்குமார் - சண்முக பாண்டியன் இணைந்து...

2024-10-12 16:42:13
news-image

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வாம்பரா'...

2024-10-12 16:39:44
news-image

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 'மிஸ்டர் ஹவுஸ்...

2024-10-12 16:38:55
news-image

விஜய் சேதுபதி - சூரி நடிக்கும்...

2024-10-12 16:35:40
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-10-11 16:43:13
news-image

'உலகநாயகன்' கமல்ஹாசன் வெளியிட்ட 'லெவன்' படத்தின்...

2024-10-11 16:42:20
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'எனக்கு தொழில்...

2024-10-11 16:41:59
news-image

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் 'மகா...

2024-10-11 16:42:47
news-image

வேட்டையன் - திரைப்பட விமர்சனம்

2024-10-10 16:02:13
news-image

கவனம் ஈர்த்ததா சிவகார்த்திகேயனின் 'அமரன்' பட...

2024-10-09 19:18:27
news-image

'பிக் பொஸ்' தர்ஷன் நடிக்கும் 'யாத்ரீகன்'

2024-10-09 19:25:53
news-image

ரஜினிகாந்தையும் அமிதாப்பச்சனையும் 'வேட்டையனில்' இணைக்கிறது லைக்கா...

2024-10-09 18:10:45