(எம்.மனோசித்ரா)
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆளுனர்கள் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஆளுனர்கள் நேரடியாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது பொறுத்தமற்ற கலாசாரமாகும் என முன்னாள் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஆளுநர் பதவியை இராஜிநாமா செய்த அவர், மாலை மினுவாங்கொடையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேடையேறி அவருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இன்று காலை எனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்து விட்டுதான் இந்த மேடையில் பேசுகின்றேன். நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே ஆளுனராக நியமிக்கப்பட்டேன். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எனது பதவி நீடிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் வடமத்திய மாகாண ஆளுனராக செயற்பட்ட போது அவர் குருணாகல் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக நான் சென்ற போது, ஆளுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது எனக் கூறினார். அவரது ஆட்சி காலத்தில் ஆளுனர்கள் அரசியலில் ஈடுபடத் தடையாகும்.
ஆனால் இன்று அவ்வாறல்ல. ஏனைய 7 மாகாணங்களின் ஆளுனர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நேரடியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். நான் ரணசிங்க பிரேமதாசவின் பல்கலைக்கழகத்தில் கற்றுள்ளதால் அந்த கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. எனவே தான் இராஜிநாமா கடிதத்தைக் கையளித்தேன்.
ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் ஆழமாக சிந்தித்து தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். அதே போன்று இந்நாட்டு மக்களும் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM