'நடன புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' எனும் திரைப்படத்தினல் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்வினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், வை. ஜி. மகேந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேந்திர ராஜன் மற்றும் நீலா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் சடலத்தை முன்வைத்து நகைச்சுவை காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாலும்... குறிப்பாக ' ஒரு பாடி நாலு லேடி' என்ற கேட்சிங்கான கேப்சன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாலும்.. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM