நபர் ஒருவர் நிர்வாணமான முறையில் யுவதி ஒருவரின் அறைக்குள் நுழைய முற்பட்ட போது யுவதி கூச்சலிட்டதால் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை ஹோமாகம கபரகட பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 ஹோமாகம கபரகட பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நபர் ஒருவர் நிர்வாணமான முறையில் இன்று அதிகாலை நுழைந்துள்ளார். இதனையடுத்து வீட்டினுள் இருந்த யுவதி, மர்ம நபர் அறையினுள் நுழைய முற்படுவதை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.

உடனே வீட்டில் இருந்த தந்தை வெளியில் வந்த போது, குறித்த நபர் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

பின்னர் தப்பிச் சென்ற நபரை பிரதேச மக்களும் சேர்ந்து தேடிய தேடியபோதும் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் விவரித்த தந்தை,

வீட்டினுள் நான் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். மற்றைய அறையில் மகளும் தாயும் உறங்கிக்கொண்டிருந்தனர். மகளின் கூச்சல் சத்தம் கேட்டது. 

உடனே வந்த பார்த்த போது நபர் ஒருவர் நிர்வாணமான முறையில் தப்பிச் சென்றார். எனினும் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்தே சிசிடிவி பொறுத்தினோம். இவ்வாறான நபர்கள் கெட்ட எண்ணங்களுடனே வீடுகளுக்குள் நுழைகின்றனர் என்றார்.