'பிக்பொஸ்' நிகழ்ச்சியின் 8 ஆவது பாகத்தை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பொஸ்' நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த வருடம் நடக்க வேண்டிய 8வது சீசனைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என அதன் பின் பல பெயர்கள் அடிபட்டது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், “வந்தாச்சு புது பிக்பொஸ்'” என்ற அறிவிப்போடு விஜய் சேதுபதி தோன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளதால் அதன் அடிப்படையில் இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்நிகழ்ச்சி துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM