மெக்ஸிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்திலுள்ள அடோயக் நகரிலுள்ள பாலமொன்றி சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின் படி, பஸ் சாரதியின் வேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பஸ் விபத்துக்குள்ளானதாகவும், சிறார்கள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் சென்ற கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குறித்த பஸ்ஸில் சென்றுள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்துக்கு மெக்ஸிகோ ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.