இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (05) காலை 8:30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி முன்னிலையில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.
சுமார் 112 உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
அத்துடன் சமூக நீர்வளங்கள் திணைக்களத்தில் இருந்து ஐந்து பேர் பிரதேச செயலகத்தில் வாக்களித்தனர்.
மொத்தம் 117 தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தார்கள்.
கட்சிகளின் முகவர்கள் இவ்வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகி வாக்களிப்பை கண்காணித்திருந்தனர்.
வாக்களிப்புகள் எவ்வித குளறுபடியும் இன்றி சுமுகமாக இடம்பெற்றன. எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM