ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று இரவு தொழில்முறை மற்றும் வணிக சமூகத்திற்கு வெளியிட்டது. கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்பிரேமதாசவின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாதார மூலவர்களான ஹர்ச டி சில்வா எரான் விக்கிரமரட்ண கபீர்ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரும் என இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சரியானதை செய்வது எப்போதும் அரசியல் ஆதாயமாக மாறாது.
சஜித்பிரேமதாச தலைமையிலான எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் குறுக்கிடாது.
மாறாக வர்த்தக நடவடிக்கைளிற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துவோம்.
சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரவேண்டும்நுண்பொருளாதார அளவில் மாற்றங்கள் அவசியம்ஆனால் சமூக ஸ்திரதன்மையும் அவசியமும்.
நாங்கள் சமூக ஜனநாயகத்தை நம்புகின்றோம் முடிவிற்கு ஒரு வழியிருக்கவேண்டும் ஆனால் அந்த வழிமுறை சிறந்ததாகயிருக்கவேண்டும்.
சிறந்த முடிவை எடுப்பதற்கான அதிகாரப்பகிர்விற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
சுதந்திரமான தொழில்நிறுவனங்களை நாங்கள் நம்புகின்றோம் அவை செல்வத்தை வளத்தை உருவாக்குகின்றன.ஆனால் இதனை சமூக சந்தை பொருளாதாரத்தில் செய்யலாம்.
இலங்கையின் வெளிவிவகார கொள்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாதுஇந்திய துணைக்கண்டத்திலிருந்து வருடாந்தம் 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கவரும் இலக்கை இலங்கை கொண்டிருக்கவேண்டும்.
இலங்கைகையை பொறுத்தவரை முக்கிய பிரச்சினை என்னவென்றால் சட்டத்தின் ஆட்சியே சட்டத்தின் ஆட்சியை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தினால் வெளிநாடுகளின் அதிகளவு முதலீடுகளையும் நம்பிக்கையையும் பெறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM