நேர்மை -பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வேண்டுகோள்

Published By: Rajeeban

05 Sep, 2024 | 10:30 AM
image

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர் பல வேட்பாளர்கள் தனது ஆதரவை கோரியுள்ள போதிலும் நடுநிலைமை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப்போவதுமில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டின் எதிர்காலம் முன்னர் ஒருபோதும் இவ்வாறான சவால்களையும் நிச்சயமற்றதன்மையையும் எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும்போது நாட்டின் நிலைமை குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தனிநபர்கள் குறித்து சிந்திக்ககூடாது,ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து சிந்திக்கவேண்டும்,அவர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருக்ககூடியவர்கள் யார் என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றதிகார முறை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் கல்வி விவசயாம் ( குறிப்பாக சிறு விவசாயிகள்)சிறிய நடுத்தர தொழில்துறையினர் ,தோட்டதொழில்துறை,சுற்றுலாத்துறை,சர்வதேச வர்த்தகம் போன்ற துறைகளிற்கான கொள்கைகளிற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து நேர்மை பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் முழு நாட்டிலும் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை -இயக்கத்தினை நாங்கள் மறக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடிக்கு புதிய லிபரல்வாத பொருளாதார...

2024-09-12 23:33:54
news-image

யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை...

2024-09-12 23:18:28
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,610 ...

2024-09-12 21:51:20
news-image

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ்,...

2024-09-12 21:03:28
news-image

தனமல்விலயில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு ;...

2024-09-12 20:00:12
news-image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட...

2024-09-12 19:56:10
news-image

முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ;...

2024-09-12 19:52:04
news-image

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே...

2024-09-12 19:32:03
news-image

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு? -...

2024-09-12 19:06:41
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும்...

2024-09-12 18:27:44
news-image

அச்சுறுத்தல்களால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுக்க...

2024-09-12 18:23:24
news-image

தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...

2024-09-12 17:36:34