இன்றைய வானிலை

05 Sep, 2024 | 06:26 AM
image

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் அகுங்கல,நெலுவ மற்றும் யால  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை...

2024-09-16 18:20:25
news-image

நானுஓயாவில் சொகுசு கார் விபத்து :...

2024-09-16 18:27:30
news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21