கஷ்டமான காலகட்டத்தில் நாட்டை பொறுப்பேற்று இயல்பு நிலைக்கு கொண்டுவந்த நபர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் - ரஞ்சித் சியம்பலாபிடிய

Published By: Vishnu

05 Sep, 2024 | 01:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் 75 வருட காலம் பூராகவும் அதிகாரத்துக்கு வந்த ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானங்களாலே நாடு நெருக்கடி நிலைக்கு செல்ல காரணமாகும். அந்த அரசாங்கங்கள் அனைத்தும் மக்களால் நியமிக்கப்பட்டதாகும். அதனால் இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள அரசியல் அனுபவமுள்ள தலைவர் ஒருவரை தெரிவுசெய்வது மக்களின் பொறுப்பாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி, செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிய போது, நாட்டை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்ல முடியுமான யாராவது இருக்குமானால் முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் கோரிக்கை விடுத்தபோது, பிரதான எதிர்க்கட்சி அதன்போது நாட்டின் நிலைமை மோசமான நிலையில் இருப்பதை அறிந்துகொண்டு நாட்டை பொறுப்பேற்க பின்வாங்கியது. ரணில் விக்ரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சி சம்பிரதாய முறைப்படியே செயற்பட்டு வந்தது. சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது மற்றும் வட்வரி அதிகரிப்பு தொடர்பிலும் அவர்கள் சமூகத்தில் பொய்யான பீதியை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தனர்.

மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 8.3வீதத்துக்கு ஆளாகி இருந்த பொருளாதாரம் நூற்றுக்கு 12வீதத்துக்கு கொண்டுவர எங்களுக்கு முடியுமாகி இருக்கிறது. செலவுகளை கட்டுப்படுத்த முடியுமான வகையில் பலமான நிதி முகாமைத்துவ சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர முடியுமாகி இருந்தது. கடன் செலுத்துதல் மற்றும் வட்டிக் கடன் தவிர கட்டுப்படுத்த முடியுமான அனைத்து செலவுகளையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 13வீதத்தை தாண்டவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் கஷ்டமான காலப்பகுதியில் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். எனவே வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை கட்டியெழுப்பிய நபர் மீது நம்பிக்கை வைத்து, ஜனாதிபதி தேர்தலில் சரியான தீர்மானம் எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41