குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இன்று மதியம் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகினர் . 

பாதிக்கப்பட்ட நால்வரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.