(நெவில் அன்தனி)
இங்கிலாந்தின் சிரேஷ்ட ஆடவர் அணியில் மூலோபாய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக டெஸ்ட் அணியின் தலைமை பயிற்றுநராக பதவி வகிக்கும் ப்றெண்டன் மெக்கலம், இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் பயிற்றுநராகவும் பதவி வகிக்கவுள்ளார்.
சர்வதேச ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் பயிற்றுநர் பதவியை ப்றெண்டன் மெக்கலம் பொறுப்பேற்கவுள்ளார் என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை உறுதி செய்தது.
இங்கிலாந்தின் தலைமை பயிற்றுநராக 2022இலிருந்து செயற்பட்டுவரும் ப்றெண்டன் மெக்கலத்தின் பதவிக் காலம் 2027வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 2025ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின் மூவகை கிரிக்கெட் அணிகளினதும் பயிற்றுநராக ப்றெண்டன் மெக்கலம் செயல்படவுள்ளார். இதற்கு அமைய இந்தியாவுக்கான இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் விஜயம் மற்றும் ஐசிசி சாம்பியன் கிண்ணம் ஆகிய போட்டிகளின்போது இங்கிலாந்தின் பயிற்றுநராக மெக்கலம் செயல்படுவார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போதும் இந்த ஆண்டு இறுதியில் கரீபியன் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தி ன்போதும் இடைக்கால தலைமைப் பயிற்றுநராக மார்க்ஸ் ட்ரஸ்கோதிக் பணியாற்றுவார்.
மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் ரொப் கீ, 'இங்கிலாந்தில் இப்போது இரண்டு பாத்திரங்களிலும் (மூவகை சர்வதேச கிரிக்கெட்) ஈடுபட பிறெண்டன் தேர்வு செய்யப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு தரம் வாய்ந்த பயிற்றுநர். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக முழு மனதுடன் ஈடுபடத் தயாராக இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நான் நம்புகிறேன்' என்றார்.
இங்கிலாந்து ஆடவர் தலைமைப் பயிற்றுநர் பிறெண்டன் மெக்கலம் கருத்து வெளியிடுகையில்,
'டெஸ்ட் அணியுடன் எனது நேரத்தை நான் மிகவும் ரசித்தேன். மேலும் இருவகை மட்டுப்படுத்தபப்பட்ட ஓவர் (ஒருநாள் மற்றும் ரி20) அணிகளுடன் எனது பணி விஸ்தரிக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புதிய சவாலை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே உள்ள வலுவான அடித்தளங்களை மேலும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் ஜொஸ் (பட்லர்) மற்றும் அணியினருடன் நெருக்கமாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.
இலங்கைக்கு எதிராக கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் ப்றெண்டன் மெக்கலம் தனது சொந்த நாட்டிற்கு சென்று சிறிது நாட்களை ஓய்வாகக் கழிக்கவுள்ளார்.
அதன் பின்னர், அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கான குளிர்கால சுற்றுப்பயணம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றின்போது இங்கிலாந்து அணியுடன் மீண்டும் மெக்கலம் இணைந்துகொள்வார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM