அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

04 Sep, 2024 | 06:11 PM
image

ம்மில் பலரும் திறமை இருந்தும், கடினமாக உழைத்தும், நிர்ணயித்துக்கொண்ட எல்லைக்கு முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பர். இவர்களிடம் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது? எனக் கேட்டால், ஒரு நிமிடம் யோசித்து, 'அதிர்ஷ்டம் இல்லை' என எளிதாக பதிலளித்துவிடுவர். அதிர்ஷ்டத்தை உருவாக்க இயலாது என ஒரு சாரார் உறுதியாக கூறுவர். மற்றொரு சாராரோ.. அதிர்ஷ்டத்தை நேரடியாக உருவாக்க இயலாது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக சில முயற்சிகளில் ஈடுபட்டால், அதிர்ஷ்டத்தை வழங்குவதற்கு தடையாக இருக்கும் சூட்சமங்கள் மறைந்துவிடும் என பதிலளிக்கிறார்கள். இந்த தருணத்தில் நாளாந்தம் அதிர்ஷ்டம் தேடி வர வேண்டும் என்றாலும் அல்லது காலையில் எழுந்தவுடன் இன்றைய நாள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என எண்ணினாலோ.. அதற்கான சில எளிய வழிமுறைகளை எம்முடைய முன்னோர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதனை பின்பற்றி அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

மேஷ லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தாகம் என்று கூறி வருபவர்களுக்கு குடிநீர் - குளிர்பானம் - இளநீர் - போன்றவற்றை தானமாக அருந்துவதற்கு வழங்க வேண்டும். இதனை அவர்கள் அருந்தும் போது அவர்களுடைய உடலும், உள்ளமும் அடையும் குளிர்ச்சி... உங்களுக்கு மலர்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் மாறும்.

ரிஷப லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை காலையில் எழுந்தவுடன் தரிசித்தால்... அன்றைய பொழுது அவர்களுக்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டம் நிரம்பியதாகவும் இருக்கும். இதன் பின்னணி என்னவெனில்.. அந்த தலைவர்களின் ஜன வசிய ஆற்றல் உங்களுக்கும் ஆசியாக கிடைக்கும் என்பது தான்.

மிதுன லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பேராசிரியராக பணியாற்றி அதாவது கலாநிதி பட்டம் பெற்று பேராசிரியராக கல்லூரிகளில் பணியாற்றி.. புகழ்பெற்ற நூலை எழுதியவர்களின் புகைப்படத்தை காலையில் எழுந்தவுடன் தரிசிக்க வேண்டும். மேலும் அவர்கள் எழுதிய நூலை வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும். இதனை மேற்கொள்ளும் போது உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். அதிர்ஷ்டமும் உண்டாகும்.

கடக லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சட்ட மேதையாக திகழ்ந்தவரின் உருவப் படத்தை காலையில் எழுந்ததும் தரிசித்தால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கும்.‌  சட்டத்தை வடிவமைத்த பண்பாளர் ஒருவரின் புகைப்படத்தை நீங்கள் நாளாந்தம் தரிசிக்கும் போதும்.. அவர் உருவாக்கிய சட்டதிட்டங்களை வாசித்து அதன் நுட்பமான திறனை உணர்ந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உருவாகும். மேலும் நீதி பரிபாலனம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிர்ஷ்டவசமாக கிட்டும்.

சிம்ம லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் சிலையை அல்லது அத்தகைய சிலையின் உருவப் படத்தை நாளாந்தம் காலையில் எழுந்ததும் தரிசித்து வணங்கினால் அன்றைய தினம் இனிமையாக கடப்பதுடன் அதிர்ஷ்டத்தையும் அழைத்து வரும்.

கன்னி லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மகாபாரதம்- ராமாயணம் போன்ற இதிகாசங்களை நூலாகவோ அல்லது டிஜிட்டலாகவோ அல்லது புகைப்படங்களாகவோ வாங்கி வைத்துக் கொண்டு.. அதனை நாளாந்தம் காலையில் எழுந்ததும் தரிசிக்கலாம். மேலும் அர்ஜுனன் புகைப்படம் அதிலும் குறிப்பாக வில் அம்புடன் அர்ஜுனன் கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நாளாந்தம் தரிசித்தாலும் மறைமுக தடைகள் அகன்று அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

துலா லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குருமார்களின் ஆசிகளை பெற்று, அறுபது வயதிற்குப் பிறகு நாட்டிற்கே வழிகாட்டும் அல்லது நாட்டை வழி நடத்திச் செல்லும் உயர்ந்த அரச பதவிகளை அலங்கரிப்பார்கள். ஆன்மீக குருமார்களின் புகைப்படங்களையும், நாட்டிற்கு வழிகாட்டிய அல்லது வழிநடத்தும் அரசியல் சார்பற்ற மக்கள் தலைவர்களின் புகைப்படங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு, நாளாந்தம் தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். மேலும் இவர்கள் நீதிமன்றத்தில் வாதாடும் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றத்தில் பாவிக்கும் வகையினதான பிரத்யேக உடைகளையோ அல்லது ஆடைகளையோ தானமாக வழங்க வேண்டும். அதன் போது அதிர்ஷ்டம் அழைக்காமலேயே வரும்.

விருச்சிக லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தொன்மையான சிவாலயத்தின் புகைப்படங்கள் - திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தின் தங்கம் வேய்ந்த கோபுர புகைப்படங்கள்-  தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய புகைப்படங்கள் - போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு காலையில் எழுந்ததும் தொட்டு வணங்கினால் அன்றைய தினம் சிறப்பாக இருப்பதுடன் அதிர்ஷ்டமும் கைகூடும்.

தனுசு லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குருவாக இருப்பவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் அல்லது குருமார்களின் பாதத்திற்கு பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். குருமார்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் நீங்கள் வழங்கும் பாத பூஜையை ஏற்கவில்லை என்றாலோ... மனம் தளராமல் பெருமாளின் பாதம் அல்லது முருகனின் பாதத்தை புகைப்படமாகவோ அல்லது பூஜை பொருட்களாகவோ வாங்கி வைத்து அதனை நாளாந்தம் காலையில் எழுந்ததும் தரிசித்து வணங்கி வந்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மகர லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தீர்க்கதரிசியாகவே இருப்பார்கள். இருப்பினும் இவர்களுக்கு வாழும் காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், புகழும் கிடைக்காது. இதனால் இவர்கள் சித்தர்கள், புகழ்பெற்ற மறைந்த அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாளாந்தம் காலையில் எழுந்ததும் அவர்களை தரிசித்தால் அவர்களின் சூட்சமமான ஆசியுடன் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

கும்ப லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொண்டு காலையில் கண்விழித்ததும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தால் அன்றைய பொழுது சிறப்பாக இருப்பதுடன் அதிர்ஷ்டமும் கிடைக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் அண்டை நாடான இந்தியாவிற்கு சென்று அங்கு மதுரை மீனாட்சி அம்மனை நேரில் தரிசனம் செய்தால்... அதன் பிறகு அதிர்ஷ்டம் கைக்கூடி வாழ்க்கையில் பல படி முன்னேறலாம்.

மீன லக்னம் - இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதுகளுக்கு தகுதியானவர்கள். ஆனால் அதற்கான அதிர்ஷ்டம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் பாடசாலையில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் வகையினதான பாடப் பொருட்களை தானமாக வழங்கிட வேண்டும்.

12 லக்னக் காரர்களும் நாளாந்தம் காலையில் எழுந்ததும் மேற்கூறிய விடயங்களை ஒருமித்த மனதுடன் பூரண நம்பிக்கையுடன் செயல்படுத்தி வரும் போது அவர்களிடம் இருந்த தரித்திரம் விலகி, அதிர்ஷ்டம் அதிகரித்து சரித்திரம் படைப்பார்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17
news-image

உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

2024-09-25 18:24:41
news-image

ஆயுள் முழுவதும் ஆதரிக்கும் நட்சத்திரங்கள்...!?

2024-09-24 17:22:30
news-image

சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப...

2024-09-23 22:16:18
news-image

எளிய பரிகாரங்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றியை...

2024-09-23 16:55:56
news-image

பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான எளிய பரிகாரம்..?

2024-09-19 22:41:05