தெலுங்கு நடிகர் அத்வே கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சுப்ரமண்யா' என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக பதாகை வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் பி. ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகும் 'சுப்ரமணியா' எனும் திரைப்படத்தில் அத்வே கதையின் நாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ் ஜி மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய வி எஃப் எக்ஸ் பணிகள் முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். பிரம்மாண்டமான பொருட்செலவில் சமூகத்தை பிரதிபலிக்கும் கற்பனையும், சாகசமும் கலந்த வகைமையில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அறிமுக பதாகை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் இருந்து வெற்றிகரமான பான் இந்திய திரைப்படங்கள் தயாராகி வருவதால்.. அந்த வரிசையில் தயாராகும் 'சுப்ரமண்யா' எனும் திரைப்படமும் வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM