மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

04 Sep, 2024 | 05:53 PM
image

சின்னத்திரையில் பிரபலமான மைக்கேல் தங்கதுரை கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆரகன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீ தானே..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் கே. ஆர். அருண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆரகன் பேஜ் நம்பர் 96' எனும் திரைப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கவி பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூர்யா வைத்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- ஜஸ்வந்த் இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நீதானே என் காதல் கவிதை ஆகிறாய்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார். காதலும் மெல்லிசையும் இணைந்திருக்கும் இந்த பாடல் .. காதலர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36