தமிழ் திரையுலகில் ஏராளமான நகைச்சுவை திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் உடல் மொழி நகைச்சுவை, வசன நகைச்சுவை, உச்சரிப்பு நகைச்சுவை, எள்ளல் நகைச்சுவை, பகடி நகைச்சுவை, அவல நகைச்சுவை, கருத்தியல் நகைச்சுவை, உருவ கேலி நகைச்சுவை என நகைச்சுவைகளில் பல வகை உள்ளது. இந்நிலையில் அவல நகைச்சுவையை முதன்மைப்படுத்தி 'நிர்வாகம் பொறுப்பல்ல' எனும் பெயரில் தமிழ் படம் ஒன்று தயாராகி இருக்கிறது.
'பேய் இருக்க பயமேன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சீ. கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' எனும் திரைப்படத்தின் சீ. கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என் எஸ். ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி - கே எம் பி புரொடக்ஷன்ஸ் - எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ராதாகிருஷ்ணன் - எம். புவனேஸ்வரன்- சி. ஷாஜு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' உண்மை சம்பவங்களை தழுவி மக்களை ஏமாற்றும் கும்பல் எப்படி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதை அவல நகைச்சுவை பாணியில் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம். சென்னை, மும்பை, காஷ்மீர், குலு மணாலி, கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM