நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் மக்களுக்கு ஏற்படும் அரிதான பாதிப்புகள் குறித்தும், பாரம்பரிய மரபணு குறைபாடு குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, அதற்காக நவீன பரிசோதனைகளை அறிமுகப்படுத்தி, அதனூடாக மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை மரபணு மருத்துவ சிகிச்சை மூலம் வழங்கப்பட்டு வருகிறது என இத்துறை வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால்... அது அவர்களுடைய வாரிசுகளுக்கும் ஏற்படுவது... பெற்றோர்களுக்கு வலிப்பு நோய் இருந்தால்.. அது அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஏற்படுவது... பெற்றோருக்கு கரு கலைப்பு நடைபெற்றிருந்தால்... அவர்களுடைய வாரிசுகளுக்கும் கரு கலைப்பு நடைபெறுவது... இதுபோன்ற பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாக உண்டாகும் பாதிப்புகளுக்கு வைத்திய நிபுணர்கள் தற்போது மரபணு பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். மேலும் தற்போது மரபணு தொடர்பான மருத்துவம் தனி பிரிவாக உருவாகி வளர்ந்து வருகிறது.
இத்துறையில் பணியாற்றும் வைத்தியர்கள் பாரம்பரிய மரபணு குறைபாடு குறித்தும், வெகு அரிதாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நோயாளிடம் விரிவாக மருத்துவ வரலாறினைக் கேட்டு, அறிந்து அதற்கான பிரத்யேகமான மரபணு பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். அதன் முடிவில் எந்த மரபணுவில்... எம்மாதிரியான மாற்றங்களும், குறைபாடுகளும் ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதனை சீரமைப்பதற்கான நவீன சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்மணிகள் கருவுற்றிருக்கும் தருணத்திலேயே அவர்களின் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்தும்.. பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சில பாதிப்புகள் குழந்தைகளுக்கு நிகழாத வண்ணம் தடுக்கும் வகையிலான சிகிச்சையையும் வழங்குகிறார்கள்.
மேலும் இத்துறை வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து கரு கலைப்பு ஏற்படும் பெண்மணிகளை அதற்கான மரபணு பரிசோதனை மேற்கொண்டு மீண்டும் கரு கலைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். சிலருக்கு பிறக்கும் குழந்தை பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்திருந்தால் அதனை சீரமைப்பதற்கான சிகிச்சையையும் மேற்கொள்கிறார்கள். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த உறைவு பிரச்சனை, கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை அதற்குரிய மரபணு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்குகிறார்கள்.
இத்துறை வைத்திய நிபுணர்கள் நோயாளிகளின் பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதன் தன்மையை தெரிந்து கொள்ளவும் பிரத்யேக பரிசோதனைகளை பரிந்துரைக்கிறார்கள். இதன் போது குரோமோசோம் குறைபாடு கண்டறியும் பரிசோதனை, கார்யோடைப் பரிசோதனை, மைக்ரோஅர்ரேஸ் பரிசோதனை, ஃபிஷ் பரிசோதனை, எம் எல் பி ஏ பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை பாதிப்பிற்கு ஏற்ற வகையில் பரிந்துரை செய்கிறார்கள்.
பரிசோதனையின் முடிவுகளை துல்லியமாக அவதானித்து நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை அவர்களிடத்தில் தெளிவாக விளக்கமளித்து நாட்பட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள்.
- வைத்தியர் பிரியா
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM