மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பம் 

04 Sep, 2024 | 05:27 PM
image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (04) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், லிங்கம் தானாக மேலெழுந்த ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்கிற பெருமைகளை கொண்டதாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் விளங்குகிறது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவ கிரியைகள் ஆரம்பமானது.

மூலமூர்த்திக்கு அபிஷேகத்துடன் விசேட பூசை இடம்பெற்றதை தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து, கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து, வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசை, பக்தர்களின் அரோகரா குரலொளிக்கு மத்தியில் கொடியேற்றம் நடைபெற்றது.

விவசாயிகள் நிரம்பிய படுவான்கரை மண்ணின் மகத்துவத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நெற்கதிர்களால் பின்னப்பட்ட கொடிச்சீலை கயிறுகள் கொண்டு கொடியேறுவது இந்த ஆலயத்துக்கே உள்ள தனிச்சிறப்பாகும். 

இதனையடுத்து, கொடித்தம்பத்துக்கு விசேட அபிஷேகம், பூசைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கின் தேரோடும் கோயில் எனும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் மறுநாள் 23ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-12 17:57:01
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24
news-image

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய...

2024-09-10 11:02:28
news-image

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின்...

2024-09-10 10:42:19
news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14