நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று  பிபிலைப் பகுதியின் ரத்துபஸ்கெட்டிய குளத்தில் இடம்பெற்றுள்ளது.

பிபிலையைச் சேர்ந்த 32 வயதுடைய அசோக்க ஜயரட்ன என்பவரே நீரில் மூழ்கி மரணமானவராவார்.

நீரில் மூழ்கி மரணமான நபர் தமது நண்பர்களுடன மேற்படி குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே  குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி மரணமானார்.

இது குறித்து பிபிலைப் பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விரைந்து சடலத்தை மீட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென பிபிலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிபிலைப் பொலிசார் இது குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.