நமுனுகலை பகுதியில் கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் பசறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, நமுனுகலை நகருக்கு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றை கண்டுபிடித்தனர். 

குறித்த பெட்டியை திறந்த பொலிஸார், கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளை அதிலிருந்து மீட்டதுடன்  குறித்த வர்த்தக உரிமையாளரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, பசறைப் பொலிசார்  மேலும் தெரிவித்தனர்.