ஆங்கில கால்வாயில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு- கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி

Published By: Rajeeban

04 Sep, 2024 | 08:12 AM
image

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர்,அதன் அடிப்பகுதி வெடித்தது, ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்தனர் எனபிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கில கால்வாயில் இந்த வருடம் அதிகளவானவர்கள் உயிரிழந்த சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவை சேர்ந்த ஆள்கடத்தல்காரர் ஒருவர் இதில் ஈடுபட்டிருக்கலாம்,உயிரிழந்தவர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்களாகயிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணியொருவரும் ஆறு சிறுவர்களும் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38