(எம்.மனோசித்ரா)
பாதாளத்தில் விழுந்த பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்தில் மீளுருவாக்கிய உலகின் ஒரே நாடு இலங்கை. அந்த பெறுமைக்குறிய வெற்றியின் உரிமையாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றின் போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மக்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் வெற்றிப்பெற செய்ய தீர்மானித்துள்ளனர். பெற்றோல், டீசல், எரிவாயு, மின்சாரம், போக்குவரத்து இவை எல்லாம் இல்லாமல் நாடு தத்தளித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டமையினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். பயமின்றி, நம்பிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்க சவால்களை ஏற்றுக்கொண்டார். சஜித், அனுரா போன்றோர் ஏற்காமல் ஓடி ஒழிந்தனர்.
வரிசைகளில் மக்கள் உயிரிழந்தனர், மருந்துகள் இல்லாமல் மக்கள் உயிரிழந்தனர், வேலைக்கு செல்லுவதற்காக எரிபொருளை நிரப்ப பல மணி நேரங்கள் காத்திருந்தோம். அப்படி இருந்த நாட்டையே ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
எனவே நாம் மனசாட்சியின் படி நாட்டை மீட்ட தலைவருக்கு எதிர்வரும் 21ம் திகதி வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். பொருளாதார நெருக்கடி சமாளிக்க திறைச்சேறியில் 10 மில்லியன் டொலர்கள் கூட இல்லாமல் எரிபொருள் கப்பல்களை விடுவிக்க முடியாத நிலை இருந்தது. உங்களால் மீன் பிடிக்க செல்ல முடியாது போனது.
எரிபொருளுக்கக வரிசையிலிருந்த எத்தனை பேர் உயிரிழந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அந்த நிலையை நினைத்து பாருங்கள். ஆனால் இன்று நாட்டை பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பொருளாதாரம் சீராகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அன்று சுற்றலாப்பயணிகளை நாட்டிற்கு வர வேணடாம் என்று கூறியது. வெளிநாட்டு பணியாளர்களை பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறினர்.
இன்று ஹோட்டல் அறைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. டொலருக்கு எதிராக ரூபாய் வலுவடைந்துள்ளது. பொருட்களின் விலை குறைந்து வருகிறது. எரிபொருள், மருந்து விலை குறைந்து வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் சிக்கலிலிருந்து நாடு மீண்டுள்ளது.
பொருளாதார ரீதியாக வீழ்ந்துவிட்ட ஒரு நாட்டை குறுகிய காலத்தில் மீட்ட உலகில் உள்ள ஒரே நாடு நமது நாடு தான். நமது பொருளாதாரம் வீழ்ந்த போது, பங்காளதேசம் நமக்கு கடன் வழங்கியது. ஆனால் இன்று பங்காளதேசம் என்ன நிலைமையில் உள்ளது. போராட்டக்காரர்கள் பங்காளதேசத்தை அழித்துள்ளனர்.
பொருளாதாரம் சரிந்துவிட்டது. அந்த நிலைக்கு மீண்டும் நம் நாடு செல்வதா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே நாடு மீண்டும் தாழ்வு நிலைக்கு வராமல் இருக்க 21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM