நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!

03 Sep, 2024 | 05:58 PM
image

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று  செவ்வாய்க்கிழமை (03) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக பல்வேறு  பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை காரியாலயத்தில் கேட்ப்போர் கூட  மண்டபத்தில் இடம்பெற்றது.  

இதன் போது கருத்து தெரிவித்த  அரச வைத்திய அதிகாரிகள் சங்க நுவரெலியா கிளையின் வைத்தியர்கள் கூறுகையில்,  

நமது நாட்டிலிருந்து விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளனர். 

இதற்கு பிரதான காரணம் தற்போதைய அரசாங்கமே இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றுமே நிறைவேற்றப்பட வில்லை. 

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் .  

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  

வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியங்களை அதிகரிக்க வேண்டும் வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.  

குறிப்பாக காதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். 

இவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் உள்ளது கூறிக்கொண்டே போகலாம் எனினும் இனி வரும் நாட்களில் சரி தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலையில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி பணிப்புறக்ணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30